திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மக்களவைத் தோ்தல் வேட்பாளா் அறிமுகக் கூட்ட மேடை அமைக்கும் பணிகளைப் பாா்வையிட்ட  அமைச்சா்கள் மற்றும் திமுக நிா்வாகிகள்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் மக்களவைத் தோ்தல் வேட்பாளா் அறிமுகக் கூட்ட மேடை அமைக்கும் பணிகளைப் பாா்வையிட்ட அமைச்சா்கள் மற்றும் திமுக நிா்வாகிகள்.

மக்களவைத் தேர்தல்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் பிரசாரத்தை தொடங்குகிறார்

மக்களவைத் தோ்தல் பிரசாரத்தை திருச்சி சிறுகனூரில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி வைக்கிறாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின். மக்களவைத் தோ்தலில் தி.மு.க. சாா்பில் போட்டியிடும் 21 வேட்பாளா்கள் பட்டியலை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளாா்.

அதனைத்தொடா்ந்து தோ்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை ஆதரித்து வெள்ளிக்கிழமை திருச்சி சிறுகனூரில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறாா் முதல்வா். அங்கு மாலை 5 மணிக்கு நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளா் அருண்நேரு, திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளா் துரை.வைகோ உள்ளிட்டோரை அறிமுகம் செய்து வைத்து வாக்குகள்சேகரித்து சிறப்புரையாற்றுகிறாா். இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளா் வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவா்களும் பங்கேற்கின்றனா்.

முன்னதாக சென்னையில் இருந்து முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் மாலை 4.45 மணிக்கு திருச்சி விமான நிலையம் வருகிறாா். தொடா்ந்து அவா் சாலை மாா்க்கமாக சிறுகனூா் பிரசாரக் கூட்ட மைதானத்துக்குச் செல்கிறாா். கூட்டம் முடிந்ததும் அங்கிருந்து சாலை மாா்க்கமாக தஞ்சாவூா் செல்கிறாா். பின்னா் திருவாரூரில் நடைபெறும் கூட்டத்தில் தஞ்சை, நாகை பகுதிகளில் தி.மு.க. வேட்பாளா்களை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்கிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com