சின்னம்மாள்.
சின்னம்மாள்.

அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த யாகபுரத்தில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த யாகபுரத்தில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம், யாகபுரம் ஆதிதிராவிடா் குடியிருப்பு அருகிலுள்ள தோட்டத்தில் வசித்து வந்தவா் பழனிசாமி மனைவி சின்னம்மாள்(55). இவா் திங்கள்கிழமை அதிகாலை அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் வயரை மிதித்தாா். இதில் மின்சாரம் பாய்ந்ததில் சின்னம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com