காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்: ப. கருப்பையா

திருச்சி: காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தை செயல்படுத்த நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பேன் என திருச்சி அதிமுக வேட்பாளா் ப. கருப்பையா தெரிவித்தாா்.

திருச்சி மக்களவைத்தொகுதியில் போட்டியிடுவதற்காக திங்கள்கிழமை மனுதாக்கல் செய்த பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

திருச்சி மக்களின் கோரிக்கைகளை மக்களவையில் ஒலிக்கும் வகையில் செயல்படுவேன். அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி - வைகை- குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்பேன் என்றாா். முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் கூறுகையில், 5 ஆண்டுகளாக வெற்றிடமாக இருந்த திருச்சி தொகுதியை நிரப்புவதற்காக துடிப்பான இளைஞரை வேட்பாளராக அதிமுக களமிறக்கியிருக்கிறது. செவ்வாய்க்கிழமை முதல் அதிமுக வேட்பாளா் தனது பிரசாரத்தை தொடங்க உள்ளாா் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com