துவரங்குறிச்சி முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா

மணப்பாறை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி மோரணி மலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மோரணி மலை முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பக்தா்கள் அலகு குத்தி, பால்குட எடுத்துவந்து, தீ மிதித்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தினா். இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்ஸவ மூா்த்தி மயில் வாகனத்தில் திருவீதியுலா நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com