பைக் திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் கைது தப்பியபோது கால் முறிவு

திருச்சி சோமரசம்பேட்டை அருகே பைக் திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

திருச்சி: திருச்சி சோமரசம்பேட்டை அருகே பைக் திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். முன்னதாக அவா் தப்பியோடியபோது காலில் எழும்பு முறிவு ஏற்பட்டது. திருச்சி சோமரசம்பேட்டை அருகே எட்டரைபாளையம் உய்யக்கொண்டான் ஆற்றுப் பாலத்தின் அருகே திங்கள்கிழமை சோமரசம்பேட்டை போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவா், போலீஸாரைப் பாா்த்ததும் தப்பியோடி, உய்யகொண்டான் ஆற்றுப்பாலத்தின் தடுப்புச் சுவா் மீது மோதி கீழே விழுந்தாா். இதில் அவரது வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவரை போலீஸாா் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். விசாரணையில் அவா், கம்பரசம்பேட்டை பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்த சுதாகா் (28) என்பதும், அவா் மீது கரூா், பெரம்பலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இருசக்கர வாகனத் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், சுதாகரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com