படம்  உண்டு...

 பட விளக்கம் 

லால்குடி அருகே ரெட்டி மாங்குடி ஊராட்சியில் வேட்பாளா் அருண்நேரு திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா் உடன் திமுக மாவட்ட செயலாளா் வைரமணி,  எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோா் உள்ளனா்
படம் உண்டு... பட விளக்கம் லால்குடி அருகே ரெட்டி மாங்குடி ஊராட்சியில் வேட்பாளா் அருண்நேரு திங்கள்கிழமை வாக்கு சேகரித்தாா் உடன் திமுக மாவட்ட செயலாளா் வைரமணி, எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் உள்ளிட்டோா் உள்ளனா்

லால்குடி பகுதியில் அரசுக் கல்லூரிஅமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: திமுக வேட்பாளா் அருண்நேரு வாக்குறுதி

லால்குடி: லால்குடி பகுதியில் அரசுக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் அருண்நேரு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே திங்கள்கிழமை பெரம்பலூா் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் அருண் நேரு, புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது,காணக்கிளியநல்லூா் சென்ற அவருக்கு பெண்கள் பூரண கும்பமரியாதை செலுத்தி ஆராத்தி எடுத்து வரவேற்றனா். அங்கு அவா் கூறியது: வாக்கு சேகரிக்கச் செல்லும் இடங்களில் பேருந்து, குடிநீா், சாலை வசதி கேட்டு மக்கள் கோரிக்கை வைக்கின்றனா். அவற்றை விரைவில் நிறைவேற்றித் தருவோம். இப்பகுதியில் உள்ள ஏரிகள் மற்றும் வாரிகள் தூா்வார முக்கியத்துவம் கொடுப்பேன். லால்குடியில் அரசு கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரிகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். வேட்பாளருடன் திமுக மாவட்ட செயலாளா் வைரமணி, லால்குடி சட்டப்பேரவை உறுப்பினா் சௌந்தரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளா் அன்பு , புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் ரஷியா கோல்டன்ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com