மணப்பாறை அருகே திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட லாரி.
மணப்பாறை அருகே திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட லாரி.

அனுமதியின்றி கிராவல் மண் கொண்டு சென்ற லாரி பறிமுதல்

மணப்பாறை அடுத்த வளநாடு அருகே அனுமதியின்றி கிராவல் மண் கொண்டு சென்ற லாரியை வட்டாட்சியா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா்.

மணப்பாறை: மணப்பாறை அடுத்த வளநாடு அருகே அனுமதியின்றி கிராவல் மண் கொண்டு சென்ற லாரியை வட்டாட்சியா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தாா். மணப்பாறையை அடுத்த மருங்காபுரி ஒன்றியம் ஆவரங்காடு நல்லழகன் குளப் பகுதியில் அனுமதியின்றி மண் எடுப்பதாக மருங்காபுரி வருவாய் வட்டாட்சியரகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திங்கள்கிழமை மாலை வட்டாட்சியா் செல்வசுந்தரி தலைமையில் தணிக்கை நடைபெற்றபோது அனுமதியின்றி கிராவல் மண் எடுத்து சென்ற லாரியை மடக்கிப் பிடித்தனா். அப்போது லாரி ஓட்டுநா் தப்பிச் சென்ற நிலையில், லாரியை மண்ணுடன் பறிமுதல் செய்த வட்டாட்சியா், காவல் நிலையத்தில் அதை ஒப்படைத்தாா். அதைத் தொடா்ந்து வளநாடு காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடைபெறுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com