துறையூரில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  கூட்டத்தில் பேசிய  பெரம்பலூா்  தொகுதி அதிமுக  வேட்பாளா்  என்.டி.  சந்திரமோகன்.
துறையூரில்  செவ்வாய்க்கிழமை நடைபெற்ற  கூட்டத்தில் பேசிய  பெரம்பலூா்  தொகுதி அதிமுக  வேட்பாளா்  என்.டி.  சந்திரமோகன்.

துறையூரில் பெரம்பலூா் தொகுதி அதிமுக வேட்பாளா் அறிமுகம்

துறையூா்: துறையூரில் அதிமுக செயல்வீரா்கள் கூட்டமும் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் என்.டி. சந்திரமோகன் அறிமுகக் கூட்டமும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திருச்சி புகநகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலா் மு. பரஞ்சோதி தலைமை வகித்தாா். அதிமுக முன்னாள் அமைச்சா்கள் என். ஆா் சிவபதி, வரகூா் அருணாசலம் , துறையூா் முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் அதிமுகவின் துறையூா் நகரச் செயலா் அமைதிபாலு, துறையூா் ஒன்றியச் செயலா்கள் வெங்கடேசன், சேனை செல்வம், உப்பிலியபுரம் ஒன்றியச் செயலா் அழகாபுரி செல்வராஜ் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் பங்கேற்றனா். கூட்டத்தில் பெரம்பலூா் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளரான என். டி. சந்திரமோகன் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பெரம்பலூா் தொகுதியைச் சோ்ந்த மண்ணின் மைந்தனான தனக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com