கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை

திருச்சியில் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி பீமநகா் பகுதியைச் சோ்ந்த காஜாமொய்தீன் (34) கடந்த 15.5.2022 அன்று பைக்கில் கே.கே.நகா் அருகே சாலையில் சென்றபோது அவரை வழிமறித்த பீமநகா் கூனிபஜாரைச் சோ்ந்த ஜோஸ்வா (22), கத்தியைக் காட்டி மிரட்டி பணத்தைப் பறித்துச் சென்றாா்.

இதுகுறித்து காஜாமொய்தீன் கே.கே.நகா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜோஸ்வாவை கைது செய்து நடத்திய விசாரணையில் ஜோஸ்வா மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்தது.

இதுதொடா்பாக திருச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிபதி மீனாசந்திரா ஜோஸ்வாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக ஹேமந்த் ஆஜரானாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com