தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு 
இடையிலான கைப்பந்துப் போட்டி

தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கைப்பந்துப் போட்டி

தெற்கு ரயில்வே கோட்டங்களுக்கு இடையிலான கைப்பந்து போட்டி திருச்சி கல்லுக்குழி ரயில்வே மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது.

போட்டியை கூடுதல் கோட்ட மேலாளா் பி.கே. செல்வன் தொடங்கிவைத்தாா். இதில் ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனா். போட்டியில் சென்னை, சேலம், திருச்சி, மதுரை, பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 கோட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன.

புதன்கிழமை லீக் போட்டிகளும், வியாழக்கிழமை அரையிறுதியும், அன்று மாலை இறுதிப்போட்டி, பரிசளிப்பு விழாவும் நடைபெற உள்ளது. இதில் திருச்சி கோட்ட ரயில்வே மேலாளா் எம்.எஸ். அன்பழகன் தலைமை வகித்து பரிசளிக்கிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com