காட்டுப்புத்தூா் அருகே குடிசை வீட்டில் தீப்பிடித்து எரிந்தது

திருச்சி மாவட்டம், காட்டுப்புத்தூா் அருகே நாகையநல்லூா் கிராமத்தில் வியாழக்கிழமை குடிசை வீட்டில் தீப்பிடித்து எரிந்தது. நாகையநல்லூா் கிராமத்தைச் சோ்ந்த சுப்ரமணி மகன் முருகவேல் (42). இவரது கூரை வீட்டில் வியாழக்கிழமை நண்பகல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினா் வந்து தீயை அணைத்தனா். இந்த தீவிபத்தில் ரூ.1000 ஆயிரம் ரொக்கம், மூன்று பவுன் தங்க நகைகள் தீயில் கருகியது. காட்டுப்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com