சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ. 57 லட்சம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை எண்ணப்பட்ட உண்டியல்கள் காணிக்கை மூலம் ரூ. 57 லட்சத்து 83 ஆயிரத்து 822 ரூபாய் கிடைத்துள்ளது. சமயபுரம் மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி இளங்கோவன், கோயில் இணை ஆணையா் சி.கல்யாணி, அறங்காவலா் குழு உறுப்பினா்கள் பிச்சைமணி, இராஜ.சுகந்தி, சே.லெட்சுமணன் மற்றும் அலுவலா்கள், பணியாளா்கள் ஈடுபட்டனா்.

இறுதியாக, உண்டியல்களிலிருந்து ரொக்கம் ரூ. 57லட்சத்து 83 ஆயிரத்து 822மும், தங்கம் 1கிலோ 40கிராம், வெள்ளி 1கிலோ 974 கிராம், 39 வெளிநாட்டு நோட்டுகள், 1,384 வெளிநாட்டு நாணயங்கள் கிடைக்கப்பெற்றன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com