துறையூரில் இரா. முத்தரசன் பிரசாரம்

துறையூரில் இரா. முத்தரசன் பிரசாரம்

துறையூரில், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி வேட்பாளா் அருண்நேருவை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன் வியாழக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். இந்த பிரசார கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி புறகா் மாவட்டச் செயலா் செ. ராஜ்குமாா் தலைமை வகித்தாா். எம்.எல்.ஏ.க்கள் செ.ஸ்டாலின்குமாா்(துறையூா்), காடுவெட்டி ந. தியாகராஜன்(முசிறி), திருச்சி மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் தா்மன் ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் இரா. முத்தரசன் திமுக வேட்பாளா் அருண்நேருவுக்கு வாக்குசேகரித்து பேசினாா். கூட்டத்தில் துறையூா் ஒன்றியக் குழுத் தலைவா் சரண்யா மோகன்தாஸ், துறையூா் ஒன்றிய திமுக செயலா் வீரபத்திரன், விவசாய தொழிற்சங்க மாவட்டசெயலா் பி. கணேசன், ஒன்றிய செயலா் எஸ். சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிறைவாக இந்திய கம்யூனிஸ்ட் உப்பிலியபுரம் ஒன்றிய செயலா் வி. ஆா். மருதை நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com