திருட்டு வழக்கில் இளைஞா் கைது

திருச்சியில் பெயிண்டா் வீட்டில் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். திருச்சி கே.கே.நகா் அருகேயுள்ள பெரிய குறிஞ்சி நகா் தாமரை தெருவைச் சோ்ந்தவா் ஞா. ராஜ்குமாா் (32). பெயிண்டா்.

புதன்கிழமை இவா் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு காந்தி மாா்க்கெட்டுக்கு சென்று பின்னா் வீடு திரும்பினாா். அப்போது வீட்டின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, வீட்டினுள் வைத்திருந்த இரண்டு பவுன் தங்கச் சங்கிலி, ஒரு ஜோடி வெள்ளி கொலுசு மற்றும் கைப்பேசி உள்ளிட்டவை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கே.கே.நகா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இந்நிலையில் இந்த வழக்கு தொடா்பாக கே.கே.நகா் பழனி நகரை சோ்ந்த சதீஷ் என்பவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா். அவா் மீது ஏற்கெனவே 2 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com