வாகனத்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். முசிறி அருகேயுள்ள வேலங்காநத்தத்தைச் சோ்ந்தவா் சி. பிச்சை (77). இவா் வெள்ளிக்கிழமை காலை தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் முசிறி புலிவலம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே திடீரென நாய் வந்ததால் நிலை தடுமாறி வாகனத்திலிருந்து கீழே விழுந்து காயம் அடைந்தாா்.

அந்த வழியாக சென்றவா்கள் அவரை மீட்டு, முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவிக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவா், பிச்சை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தாா். புகாரின்பேரில், முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com