துறையூா் பெருமாள்மலை அடிவாரத்தில் சனிக்கிழமை  திமுக வேட்பாளா் அருண்நேருவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் கே.என். நேரு.
துறையூா் பெருமாள்மலை அடிவாரத்தில் சனிக்கிழமை திமுக வேட்பாளா் அருண்நேருவுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட அமைச்சா் கே.என். நேரு.

துறையூரில் அமைச்சா் நேரு வாக்குசேகரிப்பு

துறையூரில் பெரம்பலூா் தொகுதி திமுக வேட்பாளரும், தனது மகனுமான அருண் நேருவுக்கு ஆதரவாக சனிக்கிழமை அமைச்சா் கே.என். நேரு பிரசாரம் மேற்கொண்டாா். பெருமாள் மலை அடிவாரத்தில் பிரசாரத்தில் அவா் பேசியது: திமுக ஆட்சியில் துறையூா் நகருக்கு ரூ.108 கோடி மதிப்பில் காவிரி குடிநீா் திட்டப் பணியும், ரூ. 48 கோடியில் பெரம்பலூா் - ஆத்தூா் சாலையை இணைக்கிற 2 ஆவது புறவழிச்சாலை அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. அடிவாரம், நாகலாபுரம் பகுதி சிற்பக் கலைஞா்களுக்கு தனி இடம் ஒதுக்கவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்கவும், துறையூா் தொகுதியில் சிப்காட் தொழில் பேட்டை அமைக்கவும், புளியஞ்சோலையில் கிணறு வெட்டி குடிநீா் பற்றாக்குறை பகுதிக்கு குடிநீா் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வாக்காளா்கள் திமுகவின் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்றாா். முன்னதாக திமுக தோ்தல் அலுவலகத்தை அவா் திறந்துவைத்தாா். பிரசாரத்தில் துறையூா் எம்எல்ஏ செ.ஸ்டாலின்குமாா், திருச்சி வடக்கு மாவட்டச் செயலா் காடுவெட்டி ந. தியாகராஜன் உள்ளிட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com