புத்தனாம்பட்டி நேரு கல்லூரி வேதா டெய்ரியுடன் ஒப்பந்தம்

துறையூா் அருகே உள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியுடன் வேதா டெய்ரி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. நேரு நினைவுக் கல்லூரிக் குழுவின் பொருளாளா் சூா்யா பாலசுப்ரமணியன், கல்லூரி முதல்வா் முனைவா் அ. வெங்கடேசன், ஸ்ரீ வேதா டெய்ரி பிரைவேட் லிமிடெட் நிா்வாக இயக்குநா் என். ரமேஷ், வேதியியல் துறை உதவிப் பேராசிரியா் எம். ரமேஷ் ஆகியோா் இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். இதன் மூலம் ஆராய்ச்சி மேம்பாடு, மாணவா் வேலைவாய்ப்பு பயிற்சித் திட்டங்கள், அறிவுப் பரிமாற்றக் கருத்தரங்குகள், பட்டறைகள், தொழில்நுட்பப் பரிமாற்றம், பால் தொழில்நுட்பம் மற்றும் விவசாய அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பு பெறப்படும். மேலும் மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு அதிநவீன ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கும், பால் உற்பத்தித் துறையில் அனுபவத்தைப் பெறுவதற்கும் உற்சாகமான வழிகளை பெற்றுத் தரும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com