திருச்சியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.
திருச்சியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸாா்.

மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை முடக்கியதாக மத்திய பாஜக அரசைக் கண்டித்து, திருச்சி மாநகா் மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் திருச்சியில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி அருணாசலம் மன்றம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவா் எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். இதில், மக்களவைத் தோ்தலை எதிா்கொண்டு வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கை வருமான வரித்துறையைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு சட்டவிரோதமாக முடக்கியது கண்டிக்கப்பட்டது. ஆா்ப்பாட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் காங்கிரஸ் கட்சி செய்தித் தொடா்பாளா் வேலுசாமி, வடக்கு மாவட்டத் தலைவா் கலை, முன்னாள் மாவட்டத் தலைவா் ஜெரோம் ஆரோக்கியராஜ், மாநில, மாவட்ட, துணை அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டு, மத்திய பாஜக அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com