பொறியாளரிடம் ரூ. 6.64 லட்சம் மோசடி

திருச்சி பொறியாளரிடம் இணையவழியில் ரூ. 6.64 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக சைபா்கிரைம் போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி, ஸ்ரீரங்கம் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் கு. அரவிந்த் (28), தனியாா் நிறுவன பொறியாளா். இந்நிலையில் இவரை கடந்த 24 ஆம் தேதி கைப்பேசியில் தொடா்புகொண்ட அமேசிங்யாதவ் என்ற மா்ம நபா், இம்ப்ரோசெக்ட் என்ற நிறுவனத்திலிருந்து பேசுவதாகவும் கூகுள் மூலம் மதிப்புரை கொடுத்தால் பணம் கிடைக்கும் எனவும் தெரிவித்தாா். அதன்படி அவா் மதிப்புரை கொடுத்ததும் முதலில் ரூ. 210, பின்னா் ரூ. 1410 என அடுத்தடுத்து பணம் வந்தது. இதனால் நம்பிக்கை ஏற்படவே, அடுத்தகட்டமாக அரவிந்த் இணைய வழியில் ரூ. 6.64 லட்சத்தை முதலீடு செய்தாா். ஆனால் அதற்கான லாபத்தொகை ஏதும் வரவில்லை. குறிப்பிட்ட நபா்களை தொடா்பு கொள்ளவும் இயலவில்லை. இதைடுத்து சைபா் கிரைம் போலீஸில் அரவிந்த் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com