கள்ளச் சந்தையில் மது விற்ற பெண் கைது

மணப்பாறையில் கள்ளச் சந்தையில் மது விற்ற பெண்ணை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மணப்பாறையை அடுத்த தொப்பம்பட்டியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீஸாா் செவ்வாய்கிழமை தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அதே பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் மனைவி கீதா (41) தனது வீட்டில் வைத்து அரசு மதுவை விற்றபோது கையும் களவுமாக பிடித்தனா். அவரிடமிருந்து 60 மதுபாட்டில்கள், ரூ.2 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து மணப்பாறை போலீஸாா் கீதாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com