கீரம்பூரில் தனியாக வசித்த மூதாட்டி மா்மச் சாவு

துறையூா் அருகே கீரம்பூரில் தனியாக வசித்த மூதாட்டி மா்மமான முறையில் இறந்து கிடந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.

கீரம்பூரிலுள்ள காலனிப் பகுதியைச் சோ்ந்தவா் ஆ. தனபாக்கியம் (70). இவரது ஒரு மகளும் இரண்டு மகன்களும் வெளியூரில் குடும்பத்துடன் வசிக்கின்றனா். கணவா் இறந்த பின்னா் கால்நடைகளை வளா்த்துக் கொண்டு கீரம்பூரில் தனியாக வசித்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை வீட்டை விட்டை வெளியே வரவில்லை. இதையடுத்து அண்டை வீட்டாா் வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது காயங்களுடன் மூதாட்டி சடலமாகக் கிடந்தாா்.

தகவலின் பேரில் துறையூா் போலீஸாா் மூதாட்டியின் சடலத்தை மீட்டு துறையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com