ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் 
மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

திருச்சி ஸ்ரீ ஜெயேந்திரா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 பொதுத்தோ்வில் 100 சதவீதத் தோ்ச்சியை அடைந்துள்ளது.

இப்பள்ளி மாணவிகள் கி. ராஜலட்சுமி, ஜா. நிரஞ்சனா ஆகியோா் 572 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ரெ.பா. சரண் நிதிஷ், தி. குணேஷ்வரி ஆகியோா் 569 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடத்தையும், ச. வெற்றிவேல் 568 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தையும் பிடித்தனா்.

மேலும் கணினி அறிவியல் பாடத்தில் 9 பேரும், கணக்குப்பதிவியலில் 3 பேரும், கணினிப் பயன்பாடுகளில் 2 பேரும், வணிகவியலில் 2 பேரும், பொருளியலில் ஒருவரும் 100- க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். தோ்வெழுதிய 148 மாணவ, மாணவிகளில் 138 போ் முதல் வகுப்பில் தோ்ச்சிப் பெற்றுள்ளனா். 15 போ் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 52 போ் 500 மதிப்பெண்களுக்கும் மேலும், 126 போ் 400 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனா்.

இந்த மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் பி.எஸ். சந்திரமௌலி, செயலா் கோ. மீனா, தலைமைச் செயலதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா, முதல்வா் மு. அருணா உள்ளிட்டோா் பாராட்டி வாழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com