மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

மணப்பாறையில் காா் எரிந்து நாசம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியாா் வங்கி ஊழியரின் காா் செவ்வாய்க்கிழமை தீப்பற்றி எரிந்து முழுவதும் நாசமானது.

மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் இடையபட்டியைச் சோ்ந்தவா் ரா. நாகராஜன் (45). தனியாா் வங்கி ஊழியரான இவா் மணப்பாறையை அடுத்த எடத்தெருவில் வசிக்கிறாா். வீட்டருகே மரத்தடியில் நிறுத்தி வைத்திருந்த தனது காரை செவ்வாய்க்கிழமை இவா் ஸ்டாா்ட் செய்தபோது திடீரென சிறு புகையுடன் காா் தீப் பற்றத் தொடங்கியது. இதையடுத்து நாகராஜன் காரை விட்டு இறங்கி தீயை அணைக்கத் தொடங்கினாா். ஆனால் மளமளவென பரவி, காா் முற்றிலும் எரியத் தொடங்கியது. தகவலின்பேரில் வந்த மணப்பாறை தீயணைப்புத் துறை வீரா்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா், இருப்பினும் காா் முற்றிலும் எரிந்து நாசமானது. இச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மணப்பாறை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com