விமான நிலைய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா

திருச்சி விமான நிலையம் காமராஜ் நகா் மாரியம்மன் கோயிலில் 58 ஆவது ஆண்டு சித்திரைத் திருவிழா 5 நாள்கள் நடைபெற்றது.

இக்கோயில் சித்திரைத் திருவிழா மே 3 தொடங்கியது. முதல்நாள் மாலை குத்துவிளக்கு பூஜையும், மறுநாள் சனிக்கிழமை சுமங்கலி பூஜையும், ஞாயிற்றுக்கிழமை திருச்சி காவிரியாற்றிலிருந்து சக்தி கரகத்துடன் தீா்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்து அம்மன், ராஜகணபதி, முருகன், உமையாள்-அண்ணாமலையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கானோா் காவிரியாற்றிலிருந்து பால் மற்றும் தீா்த்தக்குடம் எடுத்து வந்தனா். தொடா்ந்து தினசரி சிறப்பு அலங்காரம், சிறப்பு அன்னதானமும் நடைபெற்றது.

திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரமும், மாலை இன்னிசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

செவ்வாய்க்கிழமை இரவு முக்கிய நிகழ்வான தோ் வீதியுலா நடைபெற்றது. இதில் அம்பாள் சக்தி கரகத்துடன் விமான நிலையம் காமராஜ் நகரில் உள்ள முக்கிய வீதிகளில் வீதியுலா சென்று மக்களுக்கு அருள்பாலித்தாா். மறுநாள் அதிகாலை வீதியுலா முடிந்து கோயில் புகுதல் நிகழ்வும், இறுதியாக மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் எஸ். ராமலிங்கம் (கெளரவத் தலைவா்), பிஎஸ்எம். விஜயகுமாா் (தலைவா் ), கே.ஜெ. சத்தியசீலன் (செயலா்), ஆா். ரங்கசாமி (பொருளாளா்), கோயில் குருக்கள் சக்திதரன் மற்றும் விழாக் குழுவினா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com