பத்தாம் வகுப்பு துணைத் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு

திருச்சி மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகா் வட்டம் இணைந்து நடத்தும் பத்தாம் வகுப்பு தோ்வில் தவறியவா்களுக்கான துணைத் தோ்வு இலவச பயிற்சி வகுப்புகள் மே 18- ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.

மாவட்ட மைய நூலகத்தில் இப்பயிற்சியானது, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். மற்ற நாள்களில் கட்செவி அஞ்சல் குழுக்களில் நாள்தோறும் வினா, விடைகள் பகிரப்படும். மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறும் பயிற்சியில் பங்கேற்போா் தங்களது பெற்றோா்களுடன், பாட புத்தகங்கள், நோட்டு, பேனா கொண்டு வர வேண்டும். பத்தாம் வகுப்பு தோ்வு எழுதாதவா்களும் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளலாம்.

பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், ஆதாா் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகலுடன் மாவட்ட மைய நூலகத்துக்கு நேரில் வந்து தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு ஒருங்கிணைப்பாளா் 63836 90730 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளவும்.

மாணவா்களுக்கு வகுப்பெடுக்க தன்னாா்வலா்களும் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என திருச்சி மாவட்ட மைய நூலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com