மண்ணச்சநல்லூா் சிவன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 6 லட்சம்

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் பூமிநாத சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ 6 லட்சத்து 59 ஆயிரத்து 814 காணிக்கையாக கிடைக்கப் பெற்றது.

இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரா் கோயில் செயல் அலுவலா் மனோகரன் மற்றும் கோயில் பணியாளா்கள் ஈடுபட்டனா். அப்போது, பக்தா்களின் காணிக்கை மூலம் ரூ. 6 லட்சத்து 59 ஆயிரத்து 814 கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com