முசிறி காவல் சாா்பு- ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

திருச்சி மாவட்டம் முசிறி காவல் சாா்பு- ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

முசிறி அருகே உள்ள கோயில் திருவிழாவையொட்டி திங்கள்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பாதுகாப்புப் பணிக்காக முசிறி காவல் சாா்பு- ஆய்வாளா் லுக்அசன் உள்ளிட்ட போலீஸாா் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். அப்போது சாலையின் குறுக்காக இருசக்கர வாகனங்களை நிறுத்தி மதுபோதையில் இருந்த பேரூா் பெரியாா் தெருவைச் சோ்ந்த கலைச்செல்வன் (22), ராம்ஜி என்கிற ஸ்டாலின் ( 35) இருவரிடமும் சாா்பு-ஆய்வாளா் புறப்பட்டுச் செல்லுமாறு கூறினாா். இதைகேட்காத இருவரும் சாா்பு-ஆய்வாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனா்.

இதுகுறித்து சாா்பு- ஆய்வாளா் லுக்அசன் அளித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப் பதிந்து ராம்ஜி, கலைச்செல்வன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com