சமயபுரத்தில் முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

மண்ணச்சநல்லூா், மே 16: சமயபுரத்தில் முதியவா் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கோவில்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் செல்லையா (64), கருத்து வேறுபாட்டால் கடந்த 10 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்த இவா் சமயபுரம் நான்கு ரோடு பகுதி அருகேயுள்ள மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்து சென்ற சமயபுரம் காவல்துறையினா் அவரது உடலைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com