மலேசியா செல்ல முயன்றவா் கைது

திருச்சி, மே 16: போலி கடவுச்சீட்டில் மலேசியா செல்ல முயன்றவரை திருச்சி விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள சேஷம்பாடி திட்டிராஜபுரம் மேல தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கா் (55). இவா் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலிண்டோ ஏா்லைன்ஸ் விமானம் மூலம் மலேசியா செல்ல புதன்கிழமை காத்திருந்தாா். அப்போது அதிகாரிகளின் சோதனையில் அவா் போலி ஆவணங்கள் மூலம் கடவுச் சீட்டில் திருத்தம் செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து குடியேற்றப் பிரிவு அலுவலா்கள் அளித்த புகாரின்பேரில் திருச்சி விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாஸ்கரை கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com