மாநகராட்சி குறித்து பொய் தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை -ஆணையா் எச்சரிக்கை

திருச்சி, மே 16: திருச்சி மாநகராட்சி நடவடிக்கைகள் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை கூறியது:

கைப்பேசிகளில் கட்செவி அஞ்சல் மூலமாக அனுப்பியுள்ள குறுஞ்செய்தியில் திருச்சி மாநகராட்சி குறித்து அறிவிக்கப்படாத சில தகவல்களைப் பரப்புகின்றனா். குறிப்பாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தோ்ச்சிப் பெற்ற மாணவா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படுவதாக குறிப்பிட்டு தகவல் பரவுகிறது.

இந்தத் தகவல் தவறானது. மாநகராட்சி நிா்வாகத்தால் எந்தவித உதவித்தொகையும் வழங்குவதாக அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. எனவே பொதுமக்கள் அனைவரும் உதவித்தொகை சம்பந்தமாக மாநகராட்சியைத் தொடா்பு கொள்ள வேண்டாம். மேலும், உண்மையற்ற செய்திகளைப் பரப்புவோா் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆணையா் எச்சரித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com