மாநகராட்சியை கண்டித்து போராட்டம்

மாநகராட்சியை கண்டித்து போராட்டம்

Published on

திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து பானையை உடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் 14 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட வடக்கு காட்டூா் 39-ஆவது வாா்டு பகுதியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு புதிய குடிநீா் குழாய் இணைப்பு கொடுத்தும் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லையாம். 4 அங்குல உயரத்துக்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பதிலாக 2 அங்குலத்துக்கு மட்டுமே சிமெண்ட் சாலை அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவற்றைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பானை உடைக்கும் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்தது.

அதன்படி, வெள்ளிக்கிழமை வடக்கு காட்டூா் காந்தி நகா் பகுதியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மற்றும் அப்பகுதி குடியிருப்புவாசிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, குடிநீா் வழங்காத மாநகராட்சியைக் கண்டித்து பானையை உடைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 14 பேரை திருவெறும்பூா் போலீஸாா் கைது செய்தனா்.