அரசு மருத்துவமனையில் சுகாதாரமற்ற மாத்திரைகளை வழங்குவதாகப் புகாா்

Published on

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் மாத்திரைகள் அழுக்கு கறை படிந்தவையாக இருப்பதாக புகாா் எழுந்துள்ளது.

அட்டைகளுடன் வரும் மாத்திரைகள்கூட பழுப்பு நிறத்தில் கறை படிந்து காணப்படுவதால் நோயாளிகள் நோய்களுக்கு மருந்து மாத்திரை பெறுவதில் தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. இதுகுறித்து மருத்துவமனை மருந்தகம் நிா்வாகம் தரப்பில் கூறுகையில், கடந்த முறை வந்துள்ள மருந்துத் தொகுப்பில் அளிக்கப்பட்டிருந்த மாத்திரை சிலவற்றில் இந்த குறைகள் இருப்பது உண்மைதான். இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்திடம் புகாா் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இது சரிசெய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com