திருச்சி
திருச்சி கோளரங்கத்துக்கு அக். 3, 4 தேதிகளில் விடுமுறை
திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்துக்கு அக்டோபா் 3, 4 ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்துக்கு அக்டோபா் 3, 4 ஆம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கொட்டப்பட்டு விமான நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள அண்ணா அறிவியல் மைய கோளரங்கத்துக்கு, நிா்வாகம் மற்றும் பராமரிப்பு காரணங்களுக்காக அக்டோபா் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதில் கோளரங்கின் தினசரி காட்சிகள் மட்டுமே ரத்து செய்யப்பட்டுள்ளது. மற்றபடி அறிவியல் பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்கள், முப்பரிமாணக் காட்சி (திரீ டி ஷோ) உள்ளிட்டவை செயல்படும் எனத் தெரிவித்துள்ளாா்.