திருச்சி
திருஈங்கோய்மலையில் இன்று இலவச மருத்துவ முகாம்
திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், திருஈங்கோய்மலையில் இலவச மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
ஸ்ரீ லலிதா மகிலா ஸமாஜம் வளாகத்தில் இயங்கி வரும் ஸ்ரீ வித்யா நா்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் என்.ஆா்.சிவபதி சாந்தா மருத்துவமனை, முள்ளிப்பாடி ஊராட்சி மன்றம், ஸ்ரீ லலிதா மஹிலா சமாஜம், திருச்சி வாசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இம் முகாமில் பொது அறுவை சிகிச்சை மற்றும் லேப்ரோஸ்கோபி நிபுணரான மருத்துவா் எம்.பி சுகுமாா், குழந்தைகள் நல சிறப்பு மருத்துவா் மருத்துவா் எஸ். ஜெயசாந்தி மற்றும் மருத்துவ குழுவினா் இலவச பரிசோதனைகள் நடத்தி ஆலோசனைகள் வழங்க உள்ளனா்.