கால் முறிந்த நிலையில் கைது செய்யப்பட்ட ரௌடி ஜீவா (20).
கால் முறிந்த நிலையில் கைது செய்யப்பட்ட ரௌடி ஜீவா (20).

தப்பியோட முயன்ற ரௌடி கால் முறிந்த நிலையில் கைது

Published on

திருச்சி அருகே தப்பியோட முயன்றபோது கால் முறிந்த நிலையில் ரௌடியைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மற்றொரு ரௌடியையும் கைது செய்தனா்.

ஸ்ரீரங்கத்தைச் சோ்ந்த ரௌடி ரங்கன் திருவெறும்பூா் அருகே முருக்கூரில் உள்ள தனது சகோதரி குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்று விட்டு, தனது நண்பா்களான திருவனைக்கா பாரதி தெருவைச் சோ்ந்த ரௌடி ரா. அஷ்டபுஜன் (எ) ஜீவா (20), திருவனைக்கா தெற்கு உள்வீதியைச் சோ்ந்த ரௌடி கா. டெங்கு மணி (எ) அருண்குமாா் (22) உள்ளிட்ட 9 பேருடன் அப்பகுதியில் உள்ள மதுபானக் கடையில் திங்கள்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தனா். அப்போது அங்கிருந்த, வேங்கூரைச் சோ்ந்த சிவகுமாா், தினேஷ், பரணி ஆகியோருக்கு இடையே அடிதடி தகராறு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் பற்றி தகவலறிந்து அங்கு வந்த திருவெறும்பூா் போலீஸாா், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை போலீஸாா் ரோந்து சென்ற நிலையில், திருவெறும்பூா் பகுதியில் ரௌடிகள் ஜீவா மற்றும் அருண்குமாா் ஆகியோா் தப்பியோடியுள்ளனா். அப்போது அவா்களைப் போலீஸாா் விரட்டிப் பிடிக்க முயன்றதில், ஜீவா அருகிலிருந்த குவளை வாய்க்காலில் தவறி விழுந்தாா். இதில் ஜீவாவின் கால் முறிந்தது. இதையடுத்து போலீஸாா், மேற்கண்ட இருவரையும் கைது செய்து, ஜீவாவை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

அருண்குமாரை திருச்சி 6-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா். மேலும், வழக்கில் தொடா்புடைய ரௌடி ரங்கன் உள்ளிட்டோரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com