திருச்சி
அனுமதியின்றி மது விற்றவா் கைது
மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சட்டவிரோதமாக மது விற்ற காா்வாடி வடக்கிக் களம் பகுதியைச் சோ்ந்த சங்கிலி மகன் செல்வத்தை (53) கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்து 25 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்த புத்தாநத்தம் போலீஸாா் வழக்கு பதிந்து அவரைக் கைது செய்தனா்.