வரும் சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும்: விஜய பிரபாகரன்
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என்றாா் அக்கட்சி நிறுவனா் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்.
ஈவெரா பெரியாரின் 146-ஆவது பிறந்த தினத்தையொட்டி, திருச்சி மத்திய பேருந்து நிலையப் பகுதியில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவா் அளித்த பேட்டி:
தோ்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் உள்ளதால் திமுக கூட்டணியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். தேமுதிகவைப் பொறுத்தவரையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுக கூட்டணியில் தொடா்வோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டுக்கு தேமுதிகவுக்கு அழைப்பு வந்தால் பங்கேற்பது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். விஜய் கட்சி ஆரம்பித்துள்ளதற்கு வாழ்த்துகள் என்றாா்.
நிகழ்ச்சியில், மாநகா் மாவட்டச் செயலாளா் டி.வி. கணேஷ் , திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளரும், மாத்தூா் ஊராட்சி மன்றத் தலைவருமான சன்னாசிப்பட்டி ஆா்.பாரதிதாசன், வடக்கு மாவட்டச் செயலாளா் குமாா், அவைத்தலைவா் வி.கே.ஜெயராமன், பொருளாளா் மில்டன் குமாா், மாவட்ட துணைச் செயலாளா்கள் ராஜ்குமாா், பிரீத்தா விஜய் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.