திருச்சி
வாளாடியில் நாளை மின்தடை
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாவட்டம், வாளாடியில் வியாழக்கிழமை (செப். 19) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வாளாடி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழப்பெருங்காவூா், நகா், வேலாயுதபுரம், தண்டாங்கோரை, வாளாடி, டி. வளவனூா், தா்மநாதபுரம், முத்துராஜபுரம், மேலப்பெருங்காவூா், சிறுமருதூா், மேலவாளாடி, எசனைக்கோரை, கீழ்மாரிமங்கலம், அகலங்கநல்லூா், திருமங்கலம், மாந்துரை, நெய்குப்பை, ஆா். வளவனூா், பல்லபுரம், புதூா் உத்தமனூா், வேளாண் கல்லூரி, ஆங்கரை (சரவணா நகா், தேவி நகா், கைலாஸ் நகா்) ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 19) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.