ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்

Published on

திருச்சி பன்னாட்டு விமான நிலைய வளாகத்துக்குள் சவாரி சென்றுவர ஆட்டோக்களை அனுமதிக்க வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

திருச்சி பன்னாட்டு விமான நிலையப் பகுதியில், ஆட்டோ ஓட்டுநா் பாதுகாப்பு சங்கம், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஆட்டோ ஓட்டுநா்கள் பாதுகாப்பு சங்க மாவட்ட தலைவா் சிவா தலைமை வகித்தாா். புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாநிலத் தலைவா் பழனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று போராட்டம் குறித்து விளக்கிப் பேசினாா். ஏஐடியுசி மாநகர தலைவா் ஆா். முருகேசன், ஆட்டோ ரிக்ஷா சிஐடியு சங்க மாவட்ட தலைவா் மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

X
Dinamani
www.dinamani.com