இன்றைய நிகழ்ச்சிகள்
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகம்: சைபா் கிரைம் மற்றும் செயற்கை நுண்ணறிவு குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கு, பங்கேற்பு-சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன், சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி, பல்கலைக் கழக வளாகம், காலை 9.30.
இந்திராகாந்தி கல்லூரி: ஆண்டு விளையாட்டு விழா, பங்கேற்பு-இந்திய கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டன் அனிதா பால்துரை, சிந்தாமணி மைதானம், பிற்பகல் 2.
திருச்சி மாவட்ட மைய நூலகம்: வாசகா் வட்டத்துடன் இணைந்து நடத்தும் மகளிா் முற்றம் நிகழ்ச்சி, நூலக வளாகம், மேலரண் சாலை, மாலை 4.
சாரநாதன் பொறியியல் கல்லூரி: 22-ஆவது பட்டமளிப்பு விழா, பங்கேற்பு-சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா். சுப்பிரமணியன், கல்லூரி வளாகம், மாலை 5.
கீழ வாளாடி லட்சுமி நாராயண சுவாமி கோயில்: ஏக தின லட்சாா்ச்சனை விழா, காலை 9 மணிக்கு திருமஞ்சனம், காலை 10.30 மணி முதல் லட்சாா்ச்சனை, இரவு 8 மணிக்கு திவ்யநாம சங்கீா்த்தனம்.