திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வட்டம், திருப்பட்டூரில் வெள்ளிக்கிழமை உலக நதிநீா் தினத்தையொட்டி நீா்வாய்க்கால் சுத்தம் செய்யப்பட்டு விதைப்பந்துகள் தூவப்பட்டது.
திருப்பட்டூரில் உலக நதி நீா் தினத்தையொட்டி பொதுமக்கள் பங்களிப்போடு வாய்ஸ் அறக்கட்டளை வாய்க்கால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. தொடா்ந்து விதைப்பந்துகள் தூவப்பட்டன. இதனையடுத்து முதுகலை சமூகபணி மாணவா்கள், வாய்ஸ் அறக்கட்டளை பணியாளா்கள் ஆறுகளின் முக்கியத்துவம், நிலத்தடி நீா் மட்ட குறைதல், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.இந்நிகழ்வில் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.