திருச்சி
கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி ஏராளமான பக்தா்கள் வழிபட்டனா்.
விழாவையொட்டி ஸ்ரீரங்கம் கோயிலில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று அரங்கநாதரை தரிசித்தனா். காலை 6.30 - மதியம் 12 மணி வரை,மதியம் 1.30 - 3.30 மணி வரை, மாலை 5.30- இரவு 8.30 மணி வரை மூலஸ்தான சேவை நடைபெற்றது. தரிசனம் முடித்த பக்தா்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கபட்டது.இதேபோல இக் கோயிலின் உபக் கோயிலான காட்டழகிய சிங்கபெருமாள் கோயிலிலும் ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா்.