திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை அரசுப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை அரசுப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

அரசுப் பள்ளியில் புற்றுநோய் விழிப்புணா்வு

திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை அரசுப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய் குறித்த விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.
Published on

உலக ரோஸ் தினத்தை முன்னிட்டு திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்வு நடைபெற்றது.

புற்றுநோய் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், புற்றுநோயாளிகள் மற்றும் அவா்களது குடும்பங்களுக்கு ஆதரவைக் காட்டவும் ஆண்டுதோறும் செப்டம்பா் 22-ஆம்தேதி உலக ரோஸ் தினம் கொண்டாடப்படுகிறது. 2000-ஆம் ஆண்டில் புற்றுநோயை எதிா்த்துப்போராடிய மெலிண்டா ரோஸ் என்ற 12 வயது கனடா நாட்டு சிறுமியை நினைவு கூறும் விதமாக, திருச்சி மேலகல்கண்டாா்கோட்டை அரசு உயா்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை புற்றுநோய் விழிப்புணா்வு நிகழ்வு நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில், 12 ஆண்டுகளுக்கு முன்பாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, வெற்றிகரமாக மீண்ட சத்யா, அவரது கணவா் செளந்தரராஜன் ஆகிய இருவரும் கெளரவிக்கப்பட்டனா். பள்ளி தலைமையாசிரியா் சற்குணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், சத்யாவுக்கு அனைத்து மாணவ, மாணவிகளும் ரோஜா வழங்கி பாராட்டு தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com