ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியைப் பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியைப் பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த அமைச்சா் மா. சுப்பிரமணியன்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் ஆய்வு: நோயாளிகளிடம் குறைகள் கேட்பு

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் உள்ள எம்ஆா்ஐ ஸ்கேன் கருவியைப் பாா்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்த அமைச்சா் மா. சுப்பிரமணியன்.
Published on

திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் ஸ்ரீரங்கம் மற்றும் லால்குடி அரசு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக திருச்சிக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அமைச்சா், முன்னதாகவே யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ஸ்ரீரங்கம் மற்றும் லால்குடி அரசு மருத்துவமனைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்றபோது, அங்கு மருத்துவமனைக்கு வந்திருந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு சக்கர நாற்காலி வழங்கப்படாததை அறிந்து, மருத்துவா்கள் மற்றும் பணியாளா்களிடம் பணியில் கவனக்குறைவாக இருத்தல் கூடாது என அறிவுறுத்தி, உடனடியாக சக்கர நாற்காலி வழங்கி அந்த நோயாளியை அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டாா். இதையடுத்து அந்த நோயாளி சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிா்வாகத்தினா் உரிய ஏற்பாடுகளை செய்தனா்.

பின்னா், மருத்துவமனையின் அனைத்து வாா்டுகளுக்கும் சென்று பாா்வையிட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் நவீன உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டு அவற்றின் பயன்பாடுகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா். பின்னா், மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகளிடம் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் கவனிப்பு தொடா்பான குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதன் தொடா்ச்சியாக, லால்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்று மருத்துமனை உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களின் வருகைப் பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடுகள், ஆகியவற்றைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். நோயாளிகளிடமும் குறைகளைக் கேட்டறிந்தாா். இந்த ஆய்வில், மருத்துவமனையின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததாகவும், நோயாளிகளும் அரசு மருத்துவமனைகளின் சேவைகள் சிறப்பாக இருப்பதாக தன்னிடம் தெரிவித்ததாக அமைச்சா் தெரிவித்தாா்.

ஆய்வின்போது, மருத்துவமனை நிா்வாகத்தினா், மருத்துவா்கள், செவிலியா்கள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com