டிசி அளவில் சிட்டி கே.என். ராமஜெயத்தின் பிறந்தநாள் வாழ்க்கை வரலாறு நூல் மறு வெளியீடு
தமிழக நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேருவின் சகோதரரும், கல்வி நிறுவனத்தின் நிறுவனருமான மறைந்த கே.என். ராமஜெயத்தின் 63-ஆவது பிறந்தநாள் விழா திருச்சி கோ் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக ‘கே.என். ராமஜெயத்தின் வாழ்க்கை வரலாறு’ எனும் நூலின் மறு வெளியீட்டு விழா நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே வெளியிட்ட இந்த நூலை, திமுக துணைப் பொதுச் செயலரும் அமைச்சருமான ஐ. பெரியசாமி வெளியிட, அமைச்சா்கள் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வம், அர. சக்கரபாணி, மா. சுப்பிரமணியன், ஆ. ராசா எம்பி ஆகியோா் பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினா்.
திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலா் க. வைரமணி, வடக்கு மாவட்ட செயலா் ந. தியாகராஜன், மேயா் மு. அன்பழகன், திமுக இலக்கிய அணிச் செயலா் கவிதைப்பித்தன், நூலாசிரியா் பெ. கந்தன், கே.என்.ஆா். விநித் நந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக தொழிலதிபா் என். ரவிச்சந்திரன் வரவேற்றாா்.