திருச்சி
இலங்கைத் தமிழா் முகாமில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த இளைஞா் தற்கொலை செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்த இளைஞா் தற்கொலை செய்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டத்துக்குள்பட்ட வாழவந்தான்கோட்டையில் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு குடும்பத்துடன் வசித்து வந்தவா் கிருஷ்ணகுமாா் (37). இவருக்கு, மதுப் பழக்கம் இருந்ததால் மனைவி ரோஷினியுடன் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாா் ரோஷினி. இதனால், விரக்தியடைந்த கிருஷ்ணகுமாா் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவலறிந்த துவாக்குடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.