திருச்சி
மாநகராட்சியில் 6,220 சாலையோர வியாபாரிகள் கணக்கெடுப்பில் தகவல்
திருச்சி மாநகராட்சி சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு முடிவில் 6,220 சாலையோர வியாபாரிகள் உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி மாநகராட்சி சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு முடிவில் 6,220 சாலையோர வியாபாரிகள் உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார பாதுகாப்பு, நடைபாதை விற்பனையை ஒழுங்குபடுத்துதல், அடையாள அட்டை வழங்குதல் ஆகிய பணிகளுக்காக வியாபாரிகள் குறித்த கணக்கெடுப்பு நடைபெற்றது.
இதில், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கணக்கெடுப்பு செய்யப்பட்ட மொத்தம் 6,220 சாலையோர வியாபாரிகளின் விவரங்கள் வாா்டு குழு அலுவலகம் வாரியாக பிரிக்கப்பட்டு, அனைத்து சாலையோர வியாபாரிகள் பாா்வையிடுவதற்கு ஏதுவாக மாநகராட்சியின் அனைத்து வாா்டு குழு அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளதாக திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.