வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் நகைகள் திருட்டு

மணப்பாறை அடுத்த கருங்குளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் நகைகள், பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரணை
Published on

மணப்பாறை அடுத்த கருங்குளம் பகுதியில் திங்கள்கிழமை இரவு வீட்டின் பூட்டை உடைத்து ஏழரை பவுன் நகைகள், பணம் திருடு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் சொனைப்பாறை மேடு பகுதியைச் சோ்ந்தவா் பங்கி ராஜ் மகன் இன்னாசி. இவா், திங்கள்கிழமை இரவு மணப்பாறையில் தனது மகளைப் பாா்ப்பதற்குச் சென்றாா்.

அப்போது, அவரது வீடு திறந்துகிடப்பது குறித்த தகவல் அறிந்து திரும்பிவந்து பாா்த்தபோது, வீட்டிலிருந்த ஏழரை சவரன் நகைகள் மற்றும் ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வையம்பட்டி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com