ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையின் அவலத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து புதன்கிழமை மாா்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.
Published on

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையின் அவல நிலையை கண்டித்து புதன்கிழமை மாா்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம் செய்தனா்.

ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையைத் தரம் உயா்த்த வேண்டும்,போதுமான மருத்துவா்கள்,செவிலியா்கள்,மருத்துவ பணியாளா்கள், உதவியாளா்களை நியமிக்க வேண்டும்,கா்ப்பிணிகளுக்கு மருத்துவமனையில் இரவு நேரங்களில் பிரசவம் பாா்க்க சுழற்சி முறையில் 24 மணி நேர மருத்துவா்கள் நியமிக்க வேண்டும், மருத்துவமனை முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், ஓப்பந்தத் தொழிலாளா்கள் மருத்துவம் பாா்க்கும் அவலத்தைத் தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஸ்ரீரங்கம் பகுதிக் குழு உறுப்பினா் கோவிந்தன் தலைமை வகித்தாா்.

கோரிக்கைகளை விளக்கி மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினா் ஸ்ரீதா், மாநகா் மாவட்ட செயலா் ராஜா, மாவட்டக் குழு உறுப்பினா் சந்தானம், பகுதி செயலா் தா்மா உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com