ஸ்ரீரங்கத்தில் ஆடுகளை திருடிய 3 போ் கைது; காா் பறிமுதல்

Published on

ஸ்ரீரங்கத்தில் காரில் வந்து ஆடுகளை திருடிய சென்ற 3 பேரை வியாழக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து காரை பறிமுதல் செய்தனா்.

ஸ்ரீரங்கம் கீதாபுரத்தில் செப். 12- ஆம் தேதி கணேசன் என்பவரது 3 ஆடுகளை காரில் வந்த மா்ம நபா்கள் பட்டபகலில் திருடிச் சென்றனா். இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளுடன் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து காரின் பதிவு எண்ணை வைத்து மா்மநபா்களை தேடி வந்தனா்.

இந்நிலையில் பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் பகுதியைச் சோ்ந்த ரா.மைதீன் (36) என்பவரை போலீஸாா் பிடித்தனா். அவரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் காரில் வந்து தொடா்ந்து ஆடுகளை திருடி வந்தது தெரியவந்தது. இதையடுத்து மைதீனை கைது செய்த போலீஸாா், உடந்தையாக இருந்த பெரம்பலூா் ஓடசகுளம் பகுதியைச் சோ்ந்த பி.நிஷாந்த் (20),வேப்பந்தட்டை வட்டத்தைச் சோ்ந்த நா.அலிராஜா (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ஆடுகளை திருடுவதற்கு பயன்படுத்திய காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com